In Private Universities in India, SRM. Institute of Education, First Place

‘எஸ்.ஆர்.எம்.’ கல்வி நிறுவனம் முதல் இடம்

In Private Universities in India, SRM. Institute of Education, First Place

உலகளவில் புகழ்பெற்ற புள்ளியியல் கணக்கீட்டு நிறுவனமான ‘நேச்சர் இன்டெக்ஸ்’ என்ற அமைப்பு நடத்திய ஆய்வு முடிவில் தனியார் பல்கலைக்கழகங்களில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனம் தேசிய அளவில் முதலிடத்தை பிடித்திருகிறது 

அந்த நிறுவனம் ஒவ்வொரு ஆண்டும் சிறந்த அறிஞர்களை கொண்டு தேசிய அளவில் பல்கலைக்கழகங்களை ஆய்வு செய்து, சில கணக்கீடுகளின் அடிப்படையில் சிறந்த பல்கலைக்கழகங்களின் தர பட்டியலை வெளியிட்டு வருகிறது.

அந்த வகையில் 2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 1-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலான காலகட்டங்களில் அரசு மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களில் ஆய்வு செய்ததில் பல்கலைக்கழகங்களின் செயல்பாடுகள், அவை சமர்ப்பிக்கும் ஆய்வு கட்டுரைகள் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு அதன் தரத்தை நிர்ணயித்து பட்டியலை வெளியிட்டது

சென்னையை அடுத்த காட்டாங்கொளத்தூரில் உள்ள எஸ்.ஆர்.எம். அறிவியல் மற்றும் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் தேசிய அளவில் 21-வது இடத்தையும், இந்தியாவில் உள்ள தனியார் பல்கலைக்கழகங்கள் என்ற பிரிவில் முதல் இடத்தையும் பிடித்து சாதனை படைத்து இருக்கிறது.

தேசிய அளவில் இயற்பியல் பிரிவில் 28-வது இடத்திலும், இயற்கை மற்றும் அறிவியல் படிப்புகளில் 5-வது இடத்திலும் வேதியியல் பிரிவில் 19-வது இடத்திலும்,எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகம் பெற்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தெரிந்து கொள்ள:

Samsung Galaxy M21 (Raven Black, 4GB RAM, 64GB Storage)

Best Mobile phone in Online

 


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com