Oru Santhana Kattukkulle songs lyrics from Ellaame En Raasaathaan tamil movie ,ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்

Oru Santhana Kattukkulle songs lyrics from Ellaame En Raasaathaan and all songs lyrics from Ellaame En Raasaathaan, ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்"

ஒரு சந்தண காட்டுக்குள்ளே பாடல் வரிகள்

Movie Ellaame En Raasaathaan Movie Name (in Tamil) எல்லாமே என் ராசாதான்
Year 1995 Music Ilaiyaraaja
Lyrics Vaali Singers Ilaiyaraaja, S. Janaki

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆராரோ
பசுஞ் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே

நான் வளர்க்கும் மூத்த பிள்ளை
பூவும் பொட்டும் தந்த
நாயகனே நாயகனே..
நான் குளிக்கும் மஞ்சளுக்கு
நாளும் காவல் நின்ற
நல்லவனே நல்லவனே..
என் மாமன் அன்புக்கு
கோயில் கொண்ட தெய்வம் கூட
ஈடில்லையே
எல்லாமே என் ராசா
வாழ்வோ தாழ்வோ
சொந்தம் பந்தம் வேறில்லையே
என் போலே யார்க்கும் கணவன் வாய்க்காது
ஈரேழு ஜென்மம் உறவு நீங்காது
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே..

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திடரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திடரன் காயையிலே

வாங்கி வந்த மல்லிகைப்பூ
சூடி கொள்ள அன்புத்
தாரம் இல்லே தாரம் இல்லே..
போகையிலே என்னிடத்தில்
சொல்லிக் கொள்ள கூட
நேரம் இல்லே நேரம் இல்லே..
நான் பெற்ற செல்வமே
சொந்தம் என்று உன்னை விட்டால்
யாரும் இல்லை
நாள் தோறும் அம்மாடி
கண்ணீர் சிந்த கண்ணில் இன்னும்
நீரும் இல்லை
காயங்கள் காலம் முழுக்க ஆராதோ
நான் செய்த பாவக் கணக்கும் தீராதோ
மகிழம் பூவே எந்தன் மணிமுத்தே
குழலை போலே தினம் மழலை பேசும்
இளம் பூங்கொத்தே பூங்கொத்தே..

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
குயிலு குஞ்சு தூங்கட்டுமே
ராத்திரி வேளையிலே
கண் முழிச்சி நான் இருப்பேன்
கண்ணே உன் பக்கத்திலே
சோலை பூவே ஆரிரோ
பசும் சொக்க பொன்னே ஆரிரோ

ஒரு சந்தன காட்டுக்குள்ளே
முழு சந்திரன் காயையிலே
சிறு சிங்கார கூட்டுக்குள்ளே
மலை தென்றலும் வீசயிலே.

Lyrics Lis

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com