makkalmedia - Muthamizh Kaviyae songs lyrics from Dharmathin Thalaivan tamil movie<

Muthamizh Kaviyae songs lyrics from Dharmathin Thalaivan and all songs lyrics from Dharmathin Thalaivan, முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்

முத்தமிழ் கவியே வருக பாடல் வரிகள்

Movie Dharmathin Thalaivan Movie Name (in Tamil) தர்மத்தின் தலைவன்
Year 1988 music Ilaiyaraaja
Lyrics Panchu Arunachalam Singers K. J. Yesudas, K. S. Chithra

முத்தமிழ் கவியே வருக
முக்கனி சுவையே வருக
முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக
காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக
காதல் என்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..

காதல் தேவன் மார்பில்
ஆடும் பூமாலை நான்
காவல் கொண்ட மன்னன்
நெஞ்சில் நான் ஆடுவேன்

கண்கள் மீது ஜாடை
நூறு நான் பார்க்கிறேன்
கவிதை நூறு தானே வந்து
நான் பாடினேன்

மூடாத தோட்டத்தில்
ரோஜாக்கள் ஆட
தேனோடு நீ ஆட
ஓடோடி வா

காணாத சொர்க்கங்கள்
நான் காணத் தானே
பூந்தென்றல் தேர் ஏறி
நீ ஓடி வா

காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

ஆ.. முத்தமிழ் கலையே வருக 
முக்கனிச் சுவையும் தருக

ஹம்மிங்

சங்கம் கொள்ளும்
தமிழ் காதல் சிந்து
கொஞ்சம் கெஞ்சும்
வண்ணம் ஒரு ராகம் சிந்து

நெஞ்சம் எந்தன் மஞ்சம்
அதில் அன்பை தந்து
தந்தோம் தந்தோம்
என்று புது தாளம் சிந்து

வார்த்தைக்குள் அடங்காத
ரசமான சரசம்
நான் ஆட ஒரு மேடை
நீ கொண்டு வா

என்றைக்கும் விளங்காத
பல கோடி இன்பம்
யாருக்கும் தெரியாமல்
நீ சொல்ல வா

காலங்கள் நேரங்கள்
நம் சொந்தம்
இன்பம் கோடி ஆஆ..

ஆ..முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக

காதலென்னும் தீவினிலே
காலங்கள் நாம் வாழ
நாள் வந்தது

முத்தமிழ் கவியே வருக
முக்கனிச் சுவையே வருக

முத்தமிழ் கலையே வருக
முக்கனிச் சுவையும் தருக ஓ..

Lyrics List

 

மேலும் தெரிந்து கொள்ள:


                            

 

    இங்கே உங்கள் கருத்துகளை கீழே பதிவிடுங்கள் 
 

For Advertiment Contact : makkalmedia2020@gmail.com