நடிகர் ரஜினி காந்த் அவர்கள் புதிதாக தொடங்கவுள்ள அரசியல் கட்சி எப்படி இருக்கும்
அரசியலும், ஆன்மிகமும் பாம்பும், கீரியும் போன்றது. இரண்டுமே எதிரெதிர் திசையில் தான் பயணிக்கும் என்று கூறியவர் நடிகர் ரஜினிகாந்த அவர்கள் ஆனால் தற்போது இரண்டையும் ஒன்றாக இணைத்து ஆன்மிக அரசியலை தமிழகத்திற்கு கற்றுத் தர களத்தில் இறங்கியுள்ளார். திராவிடத்தால் வளர்ந்து முற்போக்கு சமூகமாக உயர்ந்து நிற்கும் தமிழகத்திற்கு ரஜினிகாந்த அவர்களின் அரசியல் புதுமையானது. எனவே இது தமிழ் மண்ணில் எடுபடுமா என்பது பலரது கேள்வியாக இருக்கிறது. ஆன்மிக அரசியல் ஒருபோதும் அதிகாரத்தைக் கைப்பற்றாது என்று பல்வேறு அரசியல் தலைவர்களும் விமர்சித்து வருகின்றனர். மேலும் ரஜினிகாந்த அவர்கள் கட்சி தொடங்கினால் அது பாஜகவின் ’பி’ டீமாக தான் இருக்கும் என்று விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. தமிழகத்தில் பாஜகவிற்கு போதிய அடித்தளம் இல்லாத சூழலில் ரஜினிகாந்த அவர்கள் வாயிலாக தடம் பதிக்க முயல்வதாக நீண்ட காலமாக கருத்து முன்வைக்கப்பட்டு வருகிறது.
அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பாஜகவின் மாநில அறிவு சார் பிரிவின் தலைவராக இருந்த ரா.அர்ஜுனமூர்த்தியை தனது கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ரஜினிகாந்த அவர்கள் நியமித்துள்ளதாக கூறுகின்றனர். ரஜினிகாந்த அவர்களின் அரசியல் என்பது ஜாதி, மத கலப்பில்லாத ஆன்மிக அரசியல். ஆனால் அர்ஜுனமூர்த்தியை தனது வலது கரமாக வைத்துக் கொண்டு மதச்சார்பற்ற அரசியலை ரஜினிகாந்த அவர்களால் எப்படி செய்ய முடியும் என்பது தான் மில்லியன் டாலர் கேள்வி.
இதற்கு அர்ஜுனமூர்த்தியின் பின்புலத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டியது அவசியம். இவர் புதுக்கோட்டையில் பிறந்து வளர்ந்த ஆச்சாரியமான இந்து குடும்பத்தைச் சேர்ந்தவர். ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தங்களின் தீவிர பற்றாளர். இதையொட்டியே இவரது அரசியல் வாழ்வு பாஜகவில் கொண்டு போய் சேர்த்துள்ளது. இந்த காலகட்டத்தில் இந்துத்துவா மீதான ஈடுபாட்டை அதிகமாகவே வளர்த்துக் கொண்டார்.
வேதங்களையும், பிராமணர்களையும் பலமுறை உயர்த்திப் பிடித்திருக்கிறார். இதன் அடையாளங்களை பாதுகாக்க வேண்டும் என்று அர்ஜுனமூர்த்தி கூறியிருப்பதை நாம் உன்னிப்பாக கவனிக்க வேண்டும். மேலும் தமிழர்களின் கடவுளான முருகனை முன்னிறுத்தி அரசியல் செய்யும் வித்தையை மாநில தலைவர் எல்.முருகனுக்கு திட்டம் போட்டு கொடுத்துள்ளார்.
ஒருவேளை ரஜினி என்ற சூப்பர் ஸ்டாரின் பிம்பத்தால் வாக்குகளைப் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர்ந்தால், அதன்பிறகு தான் அவரின் உண்மையான அரசியல் தமிழக மக்களுக்கு தெரியவரும். அவர் இமயமலைக்கு சென்று தியானம் செய்து தினந்தோறும் பாபாவை வழிபடும் தீவிர ஆன்மிகவாதியாக இருக்கலாம். அதை பல்வேறு மதம் சார்ந்த, சமூக நீதியால் மேம்பட்டு நிற்கும், முற்போக்கு சமூகமான தமிழக மக்களிடம் புகுத்துவது ரஜினிகாந்த அவர்கள் அரசியல் வாழ்விற்கு சரிபட்டு வருமா என்பது கேள்விக்குறி தான்.
மேலும் தெரிந்து கொள்ள:
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
- கஜா புயல் காரைக்காலை சூறையாடியது
- Dirty Pondatti HD Video Song - Kaatrin Mozhi - Jyotika - G. Dhananjayan - Madhan Karky - Radhamohan
-
பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தை உலக்கையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- 5 ஆயிரத்துக்கு போறேனா கதறி அழும் ரவுடி பேபி சூர்யா rowdy baby surya gpmuthu திருந்தவிடுங்கடா
- ஹிந்திகாரன் எப்படி எல்லாம் ஏமாத்துறானுங்க நீங்களே பாருங்க மக்களே
- கமலின் குடும்ப உறுப்பினராகிய பூஜா குமார் குடும்பத்தோடு பிறந்தநாள் கொண்டாடிய கமல் ஹாசன்!
- ஆசிரியரை அழகாய் மிரட்டும் சிறுவன் Cute Rowdy Baby Video Tamil Funny School Boy Viral Video
- Koyambedu live snake catching
- எறும்பின் விடாமுயற்சி நாயின் குறும்பு
- பண்டைய கால முறைப்படி சூரிய கிரகணத்தைகையை வைத்து கணகிட்ட கிராமத்து மக்கள்
- DARBAR Review - Rajinikanth - Nayanthara - A.R. Murugadoss - Anirudh -தர்பார்
- இந்தோனேஷியா விமான விபத்து நடந்தது எப்படி? அதிர்ச்சி பின்னணி
-
இதுவரை பார்த்திராத பாம்பு நத்தையை விழுங்கும் வீடியோ
- மகன் வருகைக்கு காத்திருக்கும் சுஜித் தாய் பண்றத ! நீங்களே பாருங்க
Comments (0)